வெளிநாடொன்றில் சடலமாக கிடந்த இலங்கை பெண் உட்பட இருவர்!

வெளிநாடொன்றில் சடலமாக கிடந்த இலங்கை பெண் உட்பட இருவர்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் லாட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிராமப்புற வீடொன்றில் இருந்து இலங்கை பெண் ஒருவர் உட்பட இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, 47 வயதான சாமிந்திகா ஜெயவர்தன மற்றும் அவரின் கணவர் 46 வயதான ஆரன் ஹாமண்ட் ஆகியோரின் உடல்கள் ஹெர்னஸ் ஓக் பகுதியில், மோர்வெல் அருகிலுள்ள மெக்ராத்ஸ் ட்ராக் என்ற இடத்தில் உள்ள வீட்டில் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விசாரணையில் கடந்த சனிக்கிழமை இரவு இரண்டு பெரிய சத்தங்கள் கேட்டதாகவும், ஆரம்பத்தில் அவை பட்டாசு வெடிப்பு அல்லது நரிகளை விரட்ட துப்பாக்கிச் சுட்டதாக நினைத்ததாகவும் அயல் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் சடலமாக கிடந்த இலங்கை பெண் உட்பட இருவர்! | Sri Lankan Woman Found Dead In Australiaஉயிரிழந்த ஆண் மற்றும் பெண் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறு யாரையும் தற்போது தேடவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணைகைளை மேற்கொண்டுள்ளனர்.