நாட்டின் இன்றைய வானிலை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நாட்டின் இன்றைய வானிலை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையின் தற்போதைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அற்ற சீரான வானிலை நிலவும் அதேவேளை, சில மாகாணங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.

நாட்டின் இன்றைய வானிலை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Sri Lanka Weather Forecast Rain Mist Alertஅதிகாலை வேளையில் நிலவும் இந்த பனிமூட்டம் காரணமாக, வீதிப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.