பிரேத அறையில் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பிரேத அறையில் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆரச்சி நேற்று (06) கருத்துக்களை வெளியிட்டார்.

இது தொடர்பில் தெரிவித்த அவர்,

பிரேத அறையில் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Report On Morgue Staff Abusing Corpseசந்தேக நபர்கள் அன்றைய தினம் இரவு வேளையில் 4 தடவைகள் சவ கிடங்கில் நுழைந்த மூன்று ஊழியர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஊழியர்கள் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அறிவியல் ரீதியான மற்றும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறைபாடுகளுடன் சடலங்களை முறையாக குளிரூட்டிகளில் வைக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து  தனது அதிருப்தியை வெளியிட்டார்.

குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது கடுமையான தண்டனை வழங்கப்படும். வைத்தியசாலை கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைய விடமாட்டோம். என தெரிவித்துள்ளார்.