உலகின் அபாய பகுதியாக இலங்கை? அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்

உலகின் அபாய பகுதியாக இலங்கை? அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்

அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உத்தியோகபூர்வ சுற்றுலா அறிவுறுத்தல் மட்டத்தில் (Travel Advisory Level) எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

உலகின் அபாய பகுதியாக இலங்கை? அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல் | Australian High Commission Notice On Sri Lankaதுல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட சுற்றுலா ஆலோசனைகளுக்கு உத்தியோகபூர்வ 'ஸ்மார்ட்ராவலர்' (Smartraveller) இணையதளத்தை மாத்திரம் நம்பியிருக்குமாறு அவுஸ்திரேலியப் பிரஜைகளிடம் அந்த அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் சில செய்திகள், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் சுற்றுலா அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தவறான தகவல்களைப் பரப்புவதாக உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய சுற்றுலா வழிகாட்டுதல்களுக்குப் பயணிகள் எப்போதும் 'ஸ்மார்ட்ராவலர்' இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்று உயர்ஸ்தானிகராலயம் மேலும் வலியுறுத்தியுள்ளது.