ரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக்
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹெலோ மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் தடை செய்யப்பட்டதால் இரு சேவைகளின் தாய் நிறுவனமான பைட்-டேன்ஸ் வியாபாரம் கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய தகவல்களின்படி டிக்டாக் நிறுவனத்திற்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்திய சந்தை மிகப்பெரியதாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் இந்திய அரசு டிக்டாக், ஹெலோ உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்திய தடை
சீன வர்த்தகர்கள் மற்றும் மூதலீட்டாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்திய அரசின் தடை உத்தரவு நடவடிக்கை சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலுமாக சீர்குலைத்து விட்டது என சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது.