Breaking News
Home / latest-update / புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் தியாகம் மறக்கப்படாது – மோடி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் தியாகம் மறக்கப்படாது – மோடி

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.



வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்ந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

‘கடந்த ஆண்டு புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான தியாகிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர்கள் நம் தேசத்திற்கு சேவை செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த விதிவிலக்கான நபர்கள். இந்தியா அவர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்காது’ என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





Check Also

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்த வருடத்துக்கான ஐ.பி.எல் தாெடருக்கான நேர அட்டவணைகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன்படி முதலாவது போட்டி மார்ச் மாதம் 29ம் திகதி …