யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 11.23 ஏக்கர் காணி விடுவிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்கவினால், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1.29 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட காணிகள்
அத்துடன் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 4.88 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மொத்தம் 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.