Breaking News
Home / latest-update / திடீரென வீட்டிற்குள் நுழைந்த இராட்சத அழையா விருந்தாளி….!! மடக்கிப் பிடித்த பொலிஸார்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திடீரென வீட்டிற்குள் நுழைந்த இராட்சத அழையா விருந்தாளி….!! மடக்கிப் பிடித்த பொலிஸார்…!

முல்லைத்தீவு – மாங்குளம் – ஓலுமடு பிரதேசத்தில் வீட்டினுள் நுழைந்த இராட்சத முதலையொன்று காவற்துறையினர் , வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த வீட்டில் நேற்று பிற்பகல் இந்த முதலை நுழைந்துள்ளது. பின்னர் காவற்துறைக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னர் , அங்கு காவற்துறையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் வந்து முதலையை தேடிய போது வீட்டில் முதலை இருக்கவில்லை.

பின்னர் , வீட்டிற்கு அருகில் உள்ள வீதியொன்றில் இருந்து குறித்த முதலை பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 12 அடி நீளம் கொண்ட இந்த முதலை பிடிக்ககப்பட்டதன் பின்னர் , அருகில் அமைந்துள்ள நீர்த்தேக்கமொன்றில் விடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Check Also

வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி

கேரளாவை சேர்ந்த திருமணமான இளம் பெண் பேஸ்புக் நண்பருடன் ஓட்டம் பிடித்த நிலையில் அவரால் பல கொடுமைகளை அனுபவித்துள்ளார். கொல்லத்தை …