Breaking News
Home / விளையாட்டு (page 30)

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு: அணியில் மாற்றமில்லை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி …

Read More »

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?- இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பயிற்சியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் ஆலோசனையில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா. லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்கொள்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான …

Read More »

உலகக்கோப்பை கிரிக்கெட் – கேன் வில்லியம்சன் அதிரடியில் நியூசிலாந்து அணி வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டான்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் டான்டனில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதல் …

Read More »

உலககோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-வது வெற்றியை ருசித்தது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் கார்டிப்பில் …

Read More »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச், தீம் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்க்ள் முடிந்து காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆண்கள் காலிறுதி போட்டி ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஜெர்மனி நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் வெரெவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று …

Read More »

உலகக்கோப்பை: பாகிஸ்தான் – இலங்கை இடையிலான ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம்

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 11-வது லீக் ஆட்டம் பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க இருந்தது. இதற்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்ட வேண்டும். ஆனால் பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Read More »

ராணுவ முத்திரையை பயன்படுத்த வேண்டாம்- டோனிக்கு ஐசிசி வேண்டுகோள்

இந்தியாவின் துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதித்த கிளவ்சை டோனி பயன்படுத்த வேண்டாம் என ஐசிசி வேண்டுகோள் விடுத்துள்ளது. புதுடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி …

Read More »

வரலாற்றை மாற்றுமா இலங்கை அணி? – பாகிஸ்தானுடன் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இதுவரை தோற்கடித்ததில்லை என்ற வரலாற்றை மாற்றும் முனைப்புடன் இன்று அந்த அணியுடன் இலங்கை மோதுகிறது. பிரிஸ்டல்: 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், இலங்கையும் மல்லுகட்டுகின்றன. 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் வெறும் 105 ரன்னில் ‘சரண்’ அடைந்தது. அதன் பிறகு …

Read More »

உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. நாட்டிங்காம்: 10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாட்டிங்காமில் நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட்இண்டீசுடன் பலப்பரீட்சை நடத்தியது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் …

Read More »

உலக கோப்பையில் பங்கேற்க விரும்பிய டிவில்லியர்ஸ்… காலம் கடந்து வந்ததால் நிராகரித்த தேர்வுக் குழு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விரும்பிய தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸின் கோரிக்கையை தேர்வுக்குழு நிராகரித்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா உள்பட 10 நாடுகள் பங்கேற்று விளையாடிவருகின்றன. இதில் டூ பிளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால், அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க அந்த அணி போராடி வருகிறது. இந்நிலையில் 2018 ஆம் …

Read More »