போரைப் பயன்படுத்தி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ட்ரம்பைக் கண்டித்த செனட்டர்

போரைப் பயன்படுத்தி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ட்ரம்பைக் கண்டித்த செனட்டர்

ஈரான் மீதான போரைக் கையாண்ட விதம் தொடர்பாக அமெரிக்க ஜனாிதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மரஃபி (Chris Murphy) கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கூட்டாளி நாடுகளுக்கு அவர் விஜயமொன் மேற்கொண்டுள்ள நிலையில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரித்த அவர், ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்களை இன்று நான் நேரில் கண்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள்

இந்தப் போருக்கு ட்ரம்ப் எந்தளவிற்குத் தயார்நிலையற்று இருந்தார் என்பதற்கும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை எவ்வித பாதுகாப்பும் இன்றி அவர் விட்டுச் சென்றுள்ளார் என்பதற்கும் இதுவே தெளிவான சான்றாகும் எனவும் மரஃபி சாடியுள்ளார்.

அக்டோபர் 03 ஆம் திகதி கதார் சென்றடைந்த மரஃபி, அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தூதரக ரீதியிலான இராஜதந்திரத் தீர்வை வலியுறுத்துமாறு கதார் அதிகாரிகள் அவருக்கு ஆலோசனை வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போர்ச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவப் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டே அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்து சில அமெரிக்க சக்தி வர்த்தக நிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.