இன்றைய ராசி பலன் 4 அக்டோபர் 2026

இன்றைய ராசி பலன் 4 அக்டோபர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வீட்டில் சில சுப காரியங்கள் தொடர்பான பேச்சு நடக்கும். ஆதாயம் தரக்கூடிய வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். என்று உங்கள் சொல், செயலில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. உங்கள் செயல்பாடுகள் பாராட்டை பெற்றுத் தரும். எதிலும் ஈடுபடுடன் செயல்படுகிறது.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய விதத்தில் உங்களுடைய செயல்பாடுகளும், நிதி நிலையில் இருக்கும். கூட்டு முயற்சியுடன் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் இன்று விலங்குவதால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். பணியிடத்தில் முக்கிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கும். அதே சமயம் உங்கள் பேச்சை கட்டுப்படுத்துவதும், விமர்சிப்பதும் தவிர்க்கவும். திருமணம் முயற்சிகளில் சில தாமதங்கள் ஏற்படலாம். உடல் நலனை கூடுதல் கவனம் தேவை. நண்பர்களாக உங்கள் செயல்கள் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். நீங்கள் செய்யக்கூடிய உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வேலை தொடர்பாக சற்று சாதனை மற்ற சூழ்நிலை காணப்படும். உங்களுடைய மனம் மகிழும் படியாக சில செய்திகள் கிடைக்கலாம். கடன் தொடர்பான விஷயங்களை சிந்தித்து முடிவெடுக்கவும். சமூக பணிகளில் உங்களுடைய முயற்சிகள் மேன்மை தரும் வியாபாரம் தொடர்பாக இருக்கக்கூடிய நெருக்கடிகள் விலகும். உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். வழக்கு விஷயங்களில் பொறுமை தேவை.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய வரவுகள் அதிகரிக்கும். அதனால் சேமிப்பை அதிகப்படுத்த முடியும். சகோதரர்கள் மூலம் உங்களுக்கு அணுகலம் உண்டாகும். வீட்டில் சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். சகோதரிகள் அல்லது பணியிடத்தில் சக தோழிகள் மூலம் ஆதரவு கிடைக்கும். இது பின் அவர்களை அனுசரித்த செல்ல வேண்டிய நாள். நினைத்த காரியங்கள் எளிதாக முடிக்க முடியும். என்று வியாபாரம் தெரியும் சில நல்ல சலுகைகளை பெற வாய்ப்பு உண்டு. நிச்சயதார்த்தத்தில் ஒரு முயற்சிக்கான முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்றுஉங்களுடைய தந்தை வழி உறவினர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். கடினமான சூழலில் நண்பர்களின் உதவி கிடைக்கும். மேலும் உங்களுடைய விவேகமான செயல்பாடுகள் சூழலை சமாளிக்கவும், பாராட்டு பெற்றுத் தரவும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும், அதன் மூலம் மதிப்பும் கிடைக்கும். கல்வி, விளையாட்டு தொடர்பான முயற்சிகளை நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வேலை தொடர்பாக தடைப்பட்டு வந்த பணிகளை முடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணியிடத்திலும், அரசியலில் இருப்பவர்களும் தங்களுடைய அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த முயலவும். கடினமான நேரத்தில் நீங்கள் எதிர்பாராத சிலருடைய ஆதரவுகள் கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் அவர்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையின் எண்ணங்களை புரிந்து கொள்ளவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் முயல்வீர்கள். இன்று உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து செயல்படுவீர்கள். மேலும் உங்களுடைய புதிய திட்டங்கள், முயற்சிகள் மூலம் சாதகமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். வியாபாரத்தில் சூட்சமங்களை புரிந்து செயல்படுவீர்கள். இது உங்கள் லாபத்தை அதிகரிக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்றுவியாபாரம் தொடர்பாக உங்களுடைய முயற்சிகள் முன்னேற்றத்தை தரும். வாழ்க்கைத் துணையின் மூலம் கிடைக்கும் சில நல்ல செய்தி வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். கேளிக்கை, பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் விருதுகள் அல்லது புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். வேலை அல்லது வீடு மாற்றும் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். இன்று சிந்தனையுடன் செயல்படுவதும், முக்கிய நடவடிக்கைகள் எடுப்பதும் மனிதருக்கு நல மாற்றங்களை தரும். புதுமைகளை விரும்புவீர்கள். ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இருப்பினும் இது உங்களுக்கு எதிர்காலத்தை நல்ல சூழலை ஏற்படுத்தும். நெருக்கடியான விஷயங்கள் விலகும். இன்று உங்கள் குடும்பத்தினருடனும், வாழ்க்கை துணையுடன் விட்டு கொடுத்துச் செல்லவும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடிய நாள்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய கருத்துக்களை மதிப்பு அதிகரிக்கும். உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து செயல்படுவீர்கள். சொந்த தொழில் செய்யக்கூடியவர்கள் லாபம் தரக்கூடிய வாய்ப்புகள் பெறுவீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் எண்ணிய விஷயங்களை சரியான விதத்தில் முடிக்க முடியும். மேலும் வேலை தொடர்பான சூட்சமங்களை உணர்ந்து செயல்படுவீர்கள். வேலை அல்லது கல்வி தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய கற்பனை திறன் அதிகரிக்கும். மேலும் புதிய சிந்தனைகளால் வீடு தொடர்பாக இருந்த கடுமையான சூழ்நிலைகளை மாற்றமுடியும். நண்பர்கள் மூலம் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாய் வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை தொடர்பான உங்கள் பார்வை மாறும். அதனால் கடினமான பணிகளை எளிதாக முடிக்க முடியும். தாய் வழி சொந்தங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயத் துறையில் இருப்பவர்கள் நன்மை அடைவார்கள். இன்று உங்களுடைய பயணங்கள் ஆதாயம், லாபத்தை தரும்.