டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலை

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலை

நேற்றுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பில் மாற்றமின்றி உள்ளது.

தற்போது, ​​வங்கிகளில் டொலரின் விற்பனை விலை 334 முதல் 335 ரூபாய் வரம்பில் உள்ளது.

சேலான் வங்கியின் தகவல்படி, ஒரு அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 326.60 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.80 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.

 

மத்திய வங்கி தகவல்

NDB வங்கியின் டொலர் வாங்கும் விலை ரூ. 326.50 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.50 ஆகவும் உள்ளது.

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலை | Us Dollar Selling Rate Today 10 October 2026

பீப்பிள்ஸ் வங்கியின் அறிக்கையின்படி, டொலர் வாங்கும் விலை ரூ. 326.92-லிருந்து ரூ. 326.87 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.03-லிருந்து ரூ. 334.98 ஆகவும் சிறிதளவு குறைந்துள்ளது.

கமர்ஷியல் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ. 324.84 ஆகவும், விற்கும் விலை ரூ. 334.75 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.

சம்பத் வங்கியின் டொலர் வாங்கும் விலை ரூ. 327.00 ஆகவும், விற்கும் விலை ரூ. 335.00 ஆக மாற்றமின்றியும் உள்ளது.