பிரான்ஸில் இடம்பெற்ற கொடூர கொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

பிரான்ஸில் இடம்பெற்ற கொடூர கொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

பிரான்சில் Noisy-le-Sec நகரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. .

நேற்று காலை 11 மணி அளவில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் நால்வர் சிறுவர்கள் எனவும், ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தாக்குதலுக்கு இலக்கான மற்றுமொரு சிறுவனே பலத்த இரத்தக்காயங்களோடு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்குச் சென்று உதவி கோரியுள்ளான்.

“தனது மாமாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாகவும், தனது குடும்ப உறுப்பினர்களை கத்தி மற்றம் சுத்தியலால் தாக்குவதாகவும்” தெரிவித்துள்ளார்.

இதன்போது காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்திருந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு தடுப்பு வைக்கப்பட்டிருந்துள்ளது.

தடுப்பினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்த காவல்துறையினர் மேலதிக வன்முறைகள் எதுவும் நிகழாமல் தடுத்துள்ளனர்.

இதேவேளை காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் சந்தேக நபர் பெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த பகுதி தேசிய மற்றும் நகராட்சி பொலிஸால் சுற்றி வளைக்கப்பட்டது.