விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் : வெளியான தகவல்

விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் : வெளியான தகவல்

விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய இடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து, விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் ஒரு ஏக்கர் விதை நெல் செய்கைக்காக 13,600 ரூபா காப்புறுதிப் பணத்தைச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செலுத்தும் பட்சத்தில், பயிர்ச் சேதம் ஏற்படும் போது ஒரு ஏக்கருக்கு 1,80,000 ரூபா நஷ்டஈட்டுத் தொகையை விவசாயிகளால் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் : வெளியான தகவல் | New Insurance Scheme For Seed Paddy Farmers Aib

வெள்ளம், வறட்சி, கட்டுப்பாடற்ற நோய்கள், பீடை மற்றும் பூச்சித் தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான இயற்கை அனர்த்தங்கள் மட்டுமன்றி, காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களையும் இந்தக் காப்புறுதித் திட்டம் உள்ளடக்குவதாக அச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.