பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்,

அதன்படி, இந்த ஆண்டு முழுவதும் ஏழு முக்கிய பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பின் படி, "இந்த ஆண்டின் முதல் பரீட்சையாக இன்று (11) நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையாகும்.

அடுத்து சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (GCE A/L) பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் ஜனவரி 12 முதல் ஜனவரி 20 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Examinations Dept Reveals 2026 National Exam Dates

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர பரீட்சை பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26, 2026 வரை நடைபெறவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (GCE A/L) பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.

2027 ஆம் ஆண்டு முதல் முறையாக உயர்தர பரீட்சைக்கு பங்கேற்கும் மாணவர்களுக்கான மற்றொரு பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சை, ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும்.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Examinations Dept Reveals 2026 National Exam Dates

இந்த ஆண்டின் இறுதி தேசியப் பரீட்சையான 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரை நடைபெற உள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026 சாதாரண தர பரீட்சையை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சை நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.