வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கையில் கடந்த ஆண்டு வாகன இறக்குமதி எதிர்பார்த்த இலக்கை விடவும், அதிகரித்ததன் காரணமாக நாட்டின் வெளிநாட்டு பொருளாதாரத் துறையில், அழுத்தம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை மத்திய வங்கி (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாகன இறக்குமதி மீதான தடைகள் மீண்டும் விதிக்கப்படும் என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஊடகங்களில் பரவியமையும் இதற்குக் காரணமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டித்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னதாக மேற்கொண்ட கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டில் பணவீக்கம் படிப்படியாக உயர்வடைந்து, ஆண்டின் இரண்டாம் பாதியில் இலக்கை எட்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கியின் அறிவிப்பு | Vehicle Imports To Sri Lanka Exceed Target Cbsl

இதேவேளை இயற்கை பேரழிவுகள் காரணமாக பணவீக்கத்தில் உயர்வு மற்றும் இறக்கம் ஆகிய இருவகை அபாயங்களும் உள்ளன எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.