இ-ஸ்கூட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்: போக்குவரத்துக் குழு வலியுறுத்தல்!

இ-ஸ்கூட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்: போக்குவரத்துக் குழு வலியுறுத்தல்!

வீதிகளில் இ-ஸ்கூட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்குவரத்துக் குழு வலியுறுத்தியுள்ளது.

ஆனால், இ-ஸ்கூட்டர்கள் நடைபாதைகளில் செல்வது தடை செய்யப்பட வேண்டும் என போக்குவரத்துக் குழு குறிப்பிட்டுள்ளது.

தற்போது, தனியாருக்குச் சொந்தமான இ-ஸ்கூட்டர்கள், பிரித்தானியாவில் தனியார் நிலத்தைத் தவிர வேறு எங்கும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

வாகனங்கள் காருக்கு, வழக்கமாக 9-15 மைல் வேகத்தில் பயணிக்கும் இ-ஸ்கூட்டர்கள் சிறந்த மாற்றீடாக அமையுமென குழு வாதிடுகிறது.

பிரித்தானியாவில் சில இடங்களில் வாடகை இ-ஸ்கூட்டர்களின் அதிகாரப்பூர்வ சோதனைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இ-ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், நடக்கும் மோதல்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளை கண்காணிக்க அரசாங்கம் சோதனைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துக் குழு கூறியது.

நடைபாதைகளில் இ-ஸ்கூட்டர்களின் மூலம் சவாரி செய்வது ஆபத்தானது மற்றும் சமூக விரோதமானது என்று விபரிக்கும் குழு, நடைபாதைகளில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் வலுவான அமுலாக்க நடவடிக்கைகள் தேவைப்படும் என்றும் கூறியது.

இ-ஸ்கூட்டர்களின் வேகத்தை தீர்மானிக்க உள்ளூர் அதிகாரிகளை அனுமதிப்பது மற்றும் பயனர்கள் தலைகவசம் அணிய ஊக்குவிப்பது ஆகியவை மேலும் குழு பரிந்துரைகளில் அடங்கும்.

டீஸ் பள்ளத்தாக்கு, மில்டன் கெய்ன்ஸ் போரோ, நார்தாம்ப்டன்ஷைர் மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆகியவை வாடகை இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதை சோதனை செய்ய கையெழுத்திட்டன.

எவ்வாறாயினும், பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் இ-ஸ்கூட்டர்கள் வீதிகளில் கைவிடப்படுவது குறித்த கவலையைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு கோவென்ட்ரியில் ஒரு சோதனை இடைநிறுத்தப்பட்டது.