அமெரிக்க வெளியுறவு அமைச்சரை சந்திக்க போப் ஆண்டவர் மறுத்தது ஏன்?

அமெரிக்க வெளியுறவு அமைச்சரை சந்திக்க போப் ஆண்டவர் மறுத்தது ஏன்?

இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மைக் பொம்பியோவை, போப் ஆண்டவர் பிரான்சிஸ் சந்திக்க மறுத்தது ஏன் என்பது தொடர்பாக வத்திகான் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வத்திகானின் வெளியுறவு அமைச்சர் பால் கல்லாகர், வெளியுறவுத்துறை செயலாளர் கார்டினல் பியட்ரோ பரோல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மைக் பொம்பியோவை போப் ஆண்டவர் சந்திக்க மாட்டார். தேர்தல் காலத்தில் போப் ஆண்டவர் எந்த அரசியல் பிரபலங்களையும் சந்திப்பது இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். எனவே இதுதான் காரணம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத ஆரம்பத்தில் மைக் பொம்பியோ, கத்தோலிக்க திருச்சபை, பிஷப்புகளை நியமிப்பது தொடர்பாக சீனாவுடனான ஒரு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதன்மூலம் அதன் தார்மீக அதிகாரத்தை பணயம் வைத்து வருகிறது என்று விமர்சித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

சீன பிஷப்புகள் நியமனத்தில் சீன அரசின் கருத்தை கேட்பதாக 2018ஆம் ஆண்டு, சீனாவுடன் வத்திகான்; ஒரு ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.