12 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு ‘ஆறு விதி’ வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்!

12 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு ‘ஆறு விதி’ வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்!

12 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு சமூகக் கூட்டங்களுக்கான ‘ஆறு விதி’ வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என குழந்தைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் கொள்கைகளால் குழந்தைகள் கவனிக்கப்படவில்லை என குழந்தைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது தேசிய முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டால் அவர்களின் நலன்களுக்கு முதலிடம் கொடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

சிறு குழந்தைகளை ‘ஆறு விதி’ வரம்பிலிருந்து விலக்குவதோடு மட்டுமல்லாமல், வெவ்வேறு வீடுகளுடன் கலக்கும் தனிநபர்கள் மீதான கட்டுப்பாடுகளிலிருந்தும் அவர்களை விலக்க அறிக்கை பரிந்துரைக்கிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து ஒன்றாக விளையாட முடியும்.

சமூகக் கூட்டங்களுக்கான ‘ஆறு விதி’ கொவிட்-19 கட்டுப்பாடு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள உட்புறங்களிலும் வெளிப்புறங்களிலும் மற்றும் வேல்ஸில் உள்ள உட்புறங்களில் ஒன்றுகூடுவதற்கு பொருந்தும்.

இருப்பினும், வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில், இந்த நடவடிக்கை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பொருந்தாது. கூடுதலாக, உள்ளூர் முடக்கநிலைகள் உள்ள பல பகுதிகளில் வீடுகளில் கலக்க தடை உள்ளது.

மாத ஆரம்பத்தில் நடைமுறைக்கு வந்த சமூகக் கூட்டங்களுக்கான சமீபத்திய வரம்பான ‘ரூல் ஒஃப் சிக்ஸ்’ விதி, ஆறு பேர் வீட்டுக்குள்ளும் வெளியிலும் சந்திப்பதைக் கட்டுப்படுத்தும்.