பிக்பாஸ் முகினின் முதல் படம் ‘வெற்றி’

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகின் ராவ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மலேசியாவை சேர்ந்த முகின் ராவ், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். அந்த சீசனின் வெற்றியாளரும் இவர்தான். இவர் ஹீரோவாக நடிக்க உள்ள முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘வெற்றி’ என பெயரிடப்பட்டு உள்ளது. பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். 

இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். மேலும் அனுபமா குமார், கிஷோர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க உள்ளார். இப்படத்தை முழுக்க முழுக்க சென்னையில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.