நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு
நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
வடமாகாண விவசாயம் மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் மாகாணங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட ரூ. 9.91 மில்லியன் நிதி மூலம், நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த 44 நன்னீர் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது நானும், கலந்துகொண்டு, மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்கி வைத்தேன்.
நன்னீர் மீன்பிடித் துறையை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், அதன் முக்கியத்துவம், எதிர்கால வளர்ச்சி மற்றும் நிலையான வாழ்வாதாரம் குறித்தும் அமைச்சர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இத்திட்டம் வடமாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதோடு, மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.