இன்றும் குறைவடைந்த தங்க விலை! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இன்றும் குறைவடைந்த தங்க விலை! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தங்கத்தின் விலையானது மூன்று இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய (29.10.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,208,519 ரூபாயாக காணப்படுகின்றது.

22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,630 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 312,650 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 37,310 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 298,450 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இன்றும் குறைவடைந்த தங்க விலை! மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | Gold Price Drops

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரத்தின்படி 24 கரட் தங்கப் பவுண் 318,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுண் 294,000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 இலட்சத்தைக் கடந்திருந்த 24 கரட் தங்கப் பவுணின் விலை படிப்படியாக குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.