வீடொன்றில் அரங்கேறிய கொடூரம் ; மூதாட்டிக்கு நேர்ந்த கதி; அதிர்ச்சியில் பொலிஸார்
அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 81 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண் அங்கவீனமுற்ற மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (27) இரவு அந்த மகன், தாயைக் கோடரியால் தலையில் தாக்கிக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சந்தேகநபரை மதவாச்சி குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆரம்பகட்ட நீதிவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்காக வேண்டி சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.