கொரோனாவால் இழந்தவற்றை மீண்டும் அடைகின்றது பிரித்தானியா

கொரோனாவால் இழந்தவற்றை மீண்டும் அடைகின்றது பிரித்தானியா

ஜூலை மாதத்தில் இங்கிலாந்தின் பொருளாதாரம் 6.6% வளர்ச்சியடைந்தது என உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் வெளியிட்டுள்ளது.

ஆனால் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட இந்த வளர்ச்சி மிகக் குறைவாகவே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்படுகள் தளர்த்தப்பட்ட பின் பொருளாதாரம் விரிவடைவது தொடர்ந்து மூன்றாவது மாதமாக இது உள்ளது.

இங்கிலாந்து கொரோனா வைரஸால் இழந்த வெளியீட்டில் பாதிக்கு மேல் மட்டுமே மீண்டுள்ளது என தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது

ஜூலை மாதத்தில் நிறுவனங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகையலங்கார நிபுணர், விடுதிகள் மற்றும் உணவகங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்தன.

உணவகங்கள் மற்றும் பப்கள் மீண்டும் திறக்கப்படுவது தங்குமிடம் மற்றும் உணவு சேவைத் துறை மூலம் பொருளாதாரத்தின் நிலை உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது,