அம்புலுவாவ மண்சரிவை ஆராய நிபுணர் குழு
நாட்டில் மீண்டும் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதால் அம்புலுவாவ பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு பாரிய அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதால் சுற்றாடல் அமைச்சர் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன உட்பட சுற்றாடல் அமைச்சருடன் சமீபத்தில் நடந்த கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன அம்புலுவாவயில் ஏற்பட்டுள்ள அபாய தன்மை மற்றும் மண்சரிவு-நிலம் தாழிறங்கல்,வெடிப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு தொடர்ந்து போராடி வருபவர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவிற்கும் அமைச்சர் அறிவுறுத்தினார்.