வீடொன்றில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவனின் சடலத்தால் பரபரப்பு

வீடொன்றில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவனின் சடலத்தால் பரபரப்பு

 அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மணவர் தமது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (9) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வீடொன்றில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவனின் சடலத்தால் பரபரப்பு | The Body Of A School Student Was Found In A House

இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த மாணவன் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.