டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதி

டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதி

 கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது.

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.

டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதி | Douglas Devananda Has Been Granted Bai

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.