
அமெரிக்காவுக்கே அவமானம்! ட்ரம்ப் சூளுரை
கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானமென அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இவரை மக்கள் விரும்பவில்லை. இதனால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக கமலா ஹரிஸால் வரமுடியாது.
கமலா ஹரிஸ் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகும், எதிர்வரும் தேர்தலில் பிடென் அவரை தனது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்திருக்கிறார்.
ஏனென்றால் கலிபோர்னியாவில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமென அவர் தெரிவித்துள்ளார்.