
பிரித்தானியா ஆபத்தில் இருக்கிறது என எச்சரிக்கை!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து அரசாங்கத்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ‘அதிவேகமாக அதிகரித்து வருகின்றன என London School of Hygiene and Tropical Medicine-ல் பணியாற்றும் பேராசிரியர் ஜான் எட்மண்ட்ஸ் கூறியுள்ளார்.
கொரோனா பரவுவதற்கான திறனை மதிப்பிடும் ஆர் எண் ‘ஒன்றுக்கு மேல்’ உயர்ந்துள்ளது, எனவே பிரித்தானியா ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் மீண்டும் அதிகரிப்பதை நாம் காணலாம். ஆகவே, தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரம் ஒருவித இயல்பு நிலைக்குத் திரும்பவும் அனுமதிக்கும் நல்ல நிலையை நாம் எட்டியுள்ளோம் என்று நான் நினைக்கவில்லை என்று அவர் கூறினார்.
மக்கள் மிகவும் நிதானமாக இருப்பதாகவும், வைரஸை மீண்டும் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்க வேண்டும் எனவும் பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான் டாம் தெரிவித்துள்ளார்.