உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தான விடயம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரல் ஆரம்பித்து சுமார் 9 மாதங்கள் கடந்துள்ள போதும் பல நாடுகளில் குறித்த தொற்று தீவிரமடைந்தே வருகின்றது.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வந்த நாடுகள், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு தளர்வுகளை ஏற்படுத்தின.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவிற்கான செயல் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் கூற முடியாது.

இந்த வைரஸ் மிக எளிதாக பரவுவக் கூடியது. எனவே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாமல், தளர்வுகளை அறிவிப்பது பேரழிவிற்கான செயலாகும்.

மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் இருந்தே பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.