வழமைக்கு திரும்பும் இங்கிலாந்து - பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை!

வழமைக்கு திரும்பும் இங்கிலாந்து - பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இங்கிலாந்தில் கொரோனா அச்சம் குறைந்து முடக்கநிலை தளர்த்தப்பட்டு வரும் நிலையில் அழகு சிகிச்சைகள், சிறிய திருமண வரவேற்புகள் மற்றும் நேரடி உட்புற நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க முடியுமென பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவிக்கையில்,

எம் நாட்டில் பெரும்பாலான மக்கள் விதிகளைப் பின்பற்றுகிறார்கள். வைரஸை கட்டுப்படுத்த உதவி செய்கிறார்கள்.

இருப்பினும் சிலர் விதிமுறைகளை மீறுகிறார்கள். மீண்டும் மீண்டும் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக அதிக தண்டனை வழங்கப்படும்.

முகக்கவசங்களை அணிய மறுத்ததற்கான அபராதம் அதிகபட்சமாக 3,200 பவுண்டுகளாக அதிகரிக்ககூடும்.

சமூக தொலைதூர கட்டுப்பாடுகளை மீறுவதை இலக்காக கொண்ட கடுமையான புதிய நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகிறதென அவர் தெரிவித்துள்ளார்.