மனைவியின் தாலிகொடியை கொழும்பு யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்; அதிர்ச்சி தரும் பின்னனி!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் , மனைவிக்கு தெரியாது எடுத்துசென்ற 9 பவுண் தாலிகொடியை கொழும்பு யுவதி எடுத்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம், மனைவி மறைவிடத்தில் இருந்த தாலிகொடியை விசேடம் ஒன்றுக்காக எடுக்க சென்றபோதே கணவனின் குட்டு வெளிப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமணமான வங்கி ஊழியர் ஒருவருக்கு , அவரது நண்பனின் ஊடாக கொழும்பு யுவதி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அந்த யுவதியுடன் தனித்திருக்க விரும்பி குறித்த வங்கி ஊழியர் மனைவிக்கு தெரியாது அவர்து தாலிகொடொயை எடுத்துகொண்டு கொழும்பு யுவதியுடன் வவுனியா சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வங்கி ஊழியர் கண் அயர்ந்த நேரத்தில் கொழும்பு யுவதி, வங்கி ஊழியரிடம் இருந்த தாலிக்கொடியை எடுத்துகொண்டு கம்பி நீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண் விழி்த்த பின்னரே வங்கி ஊழியருக்கு , கொழும்பு யுவதி தாலிகொடியுடன் மாயமாகியமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து நண்பனுடன் யுவதியை தேடியபோதும் அவர்களால் கொழும்பு யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இந்த நிலையிலேயே மனைவி தாலி கொடியை எடுக்க சென்றபோது மறைவிடத்தில் இருந்த தாலிக்கொடியை கணவன் எடுத்து சென்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது.
நண்பருக்கு இரவல் கொடுத்ததாக கணவன் சமாளித்தபோதும், தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ததால், நண்பனின் வீடு சென்று மனைவி அது தொடர்பில் வினவியபோதே நடந்த சம்பவத்தால், மனைவியும், நண்பனின் மனைவி்யும் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதுடன், விவாகரத்துவரை சென்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.