தேங்காய் எண்ணெய் விலை திடீர் உயர்வு
நாட்டில் சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில், தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
அதேநேரம், மரக்கறி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவின் பின்னர் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் , சமையல் எண்ணெய்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.