தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி! தமிழக அரசு அதிரடி உத்தரவு... எந்த நேரத்தில் வெடிக்கலாம் தெரியுமா?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்துமாறும், அதிக சத்தம் எழுப்பும் தொடர் பட்டாசுகளைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அமைதிப் பகுதிகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி கொண்டாட்டத்துடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
உங்கள் கருத்து என்ன? தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியது சரியான முடிவா?