நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி : குறைக்கப்பட்டது கட்டணம்
நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
இது தொடர்பாக கப்பல் சேவைக்கு பொறுப்பான ஜெயசீலன் தெரிவிக்கையில்,
கட்டணக் குறைப்பு : பயணப் பொதி (Luggage) சலுகை
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் ₹5,500 ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

பயணிகள் தங்களது உடமைகளில், 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
* கூடுதல் லக்கேஜ் கட்டண விவரங்கள்: 30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன: *
5 கிலோ: ₹1,500 (LKR 5,250 / USD 16) * 10 கிலோ: ₹2,500 (LKR 8,750 / USD 26) * 30 கிலோ: ₹6,000 (LKR 21,000 / USD 63) *
பயணிகள் கொள்ளளவு
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும், காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்கலாம்.
திருத்தப்பட்ட பயணக் கட்டண விபரங்கள்
நாகப்பட்டினம் - காங்கேசனத்துறை (Economy): * பெரியவர்கள் (Adult): ₹5,500 | LKR 19,250 | USD 58 * குழந்தைகள் (Child): ₹5,000 | LKR 17,500 | USD 53 * காங்கேசனத்துறை - நாகப்பட்டினம் (Economy & Pre Eco): * Economy - பெரியவர்கள்: ₹5,500 | LKR 19,250 | USD 58 * Economy - குழந்தைகள்: ₹5,000 | LKR 17,500 | USD 53 * Pre Eco - பெரியவர்கள்: ₹6,000 | LKR 21,000 | USD 64 * Pre Eco - குழந்தைகள்: ₹5,500 | LKR 17,250 | USD 58

நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் னவும் கடந்த வருடம்போல் இம்முறை மழையுடனான பருவகாலத்திற்கு சேவை நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது