மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்- முதலமைச்சர் விஜய் வீரவணக்கம்
'ஜம்புத் தீவு பிரகடனத்தை' முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
மருது சகோதரர்களின் நினைவுநாளில், அவர்தம் ஒப்பற்ற வீரம், தியாகத்தை போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுளள் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், 'ஜம்புத் தீவு பிரகடனத்தை' முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.