102 நாட்களுக்கு பின்னர் நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று..!

102 நாட்களுக்கு பின்னர் நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று..!

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு தொற்றாளர்களிடையேயான பரவல் மூலம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அந்நாட்டின் பெரிய மாநகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆக்லாண்ட் நகரத்தில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில் சமூக இடைவெளி அறிவுறுத்தல்கள் கடைபிடிக்குமாறு அந்நாட்டு சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

நியூசிலாந்து கொரோனா தொற்றை கையாள்வதில் ஏனைய நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கடந்த பெப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இன்றுவரை 1200 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் இதுவரையில் 22 பேர் கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.