இன்றைய ராசிபலன் 22.8.2026
மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அதிக விரயம் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். பயணங்களால் தொல்லை உண்டு. நட்பு பகையாகும்.
ரிஷபம்
மாலையில் மனக்குழப்பம் ஏற்படும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
மிதுனம்
புதிய திருப்பம் ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
சுபச்செலவு ஏற்படும் நாள். தொழில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர்களால் தொல்லை உண்டு. துணிவும். தன்னம்பிக்கையும் தேவை.
சிம்மம்
யோகமான நாள். தன்னம்பிக்கையோடு செயல் படுவீர்கள். தடைகள் அகல நண்பர்கள் வழி கூறுவர். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும்.
கன்னி
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் பலன் தரும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.
துலாம்
வருமானம் வரும் வழியைக் கண்டுகொள்ளும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். ஆன்மிகப் பயணம் அமைதியைத் தரும். உத்தியோக உயர்வு. பற்றிய தகவல் உண்டு.
தனுசு
குறுக்கீடுகள் அகலும் நாள். எந்த முடிவும் எடுக்கும்பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. பயணங்களில் ஆர்வம் கூடும்.
மகரம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூகநலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
கும்பம்
புதிய பாதை புலப்படும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும், கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும்.
மீனம்
எதிர்காலம் சிறப்படையத் திட்டங்கள் தீட்டும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.