மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு: 4-வது சுற்றில் த.வெ.க. முன்னிலை
இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6 ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது.
இதனை தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் 3-வது சுற்று முடிவில் 2,997 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. முன்னிலை பெற்றுள்ளது. 6,370 வாக்குகள் பெற்று தி.மு.க. இரண்டாம் இடமும், 5,276 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. மூன்றாம் இடத்திலும் உள்ளது. நாம் தமிழர் கட்சி 154 வாக்குகளும், சிபிஎம் 70 வாக்குகளும் பெற்றுள்ளன.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கள நிலவரமும் மாறி நிமிடத்திற்கு நிமிடம் மாறுகிறது.