இன்றைய ராசி பலன் 9 அக்டோபர் 2026

இன்றைய ராசி பலன் 9 அக்டோபர் 2026

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுடைய பணிகள் சரியான நேரத்தில் முடிக்க கூடிய சூழ்நிலை காணப்படும். இன்று உங்களுடைய பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், இன்று எதிர்காலம் குறித்த புரிதல் அதிகரிக்கும். இன்று மருத்துவத் துறை, கணக்காளர்கள் போன்ற நபர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். உங்களுடைய திறமை வெளிப்படக்கூடிய நாள்.இன்று உங்களுடைய அனுபவ அறிவு பயன்படுத்த கூடியதாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் வேகத்தை விட, விவேகமாக செயல்பட வேண்டிய நாள். உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக லாபத்தை மேம்படுத்தக் கூடிய புதிய திட்டங்கள், சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உங்களுடைய சேமிப்பை அதிகரிக்கும் விதமான சிக்கன நடவடிக்கையும், சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடவும். புதிய திட்டங்கள் இலக்குகள் மனதில் தோன்றும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று நீங்கள் மேற்கொள்ளக் கூடிய பயணங்கள் அலைச்சலையை தரக்கூடியதாக இருந்தாலும், ஆதாயமும் உண்டாகும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உயர் பொறுப்பில் இருப்பவர்கள், சில முக்கிய புள்ளிகளை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உறவுகள் மேம்படக்கூடியதாக இருக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் நல்ல விதத்தில் அமையும். கடன் சார்ந்த பிரச்சினைகள், சுமைகள் குறையும். இன்று உங்கள் மனதில் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பாக மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். வீட்டில் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். மேலும் புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கலாம்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்களுடைய நிதானமான செயல்பாடுகள் மூலம் குடும்பத்திலும், பணியிடத்திலும் உள்ள எதிர்ப்புகள் குறையும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று அன்புக்குரியவர்களே சந்திக்க மற்றும் அவர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். காதலில் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்ப்புகள் குறையும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யும் வேலை, வியாபார பணிகளில் முன்னேற்ற வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்கள் கல்வி தொடர்பாக இருந்த கடினமான சூழ்நிலை அல்லது இழுபறியான சூழல் நீங்கும். சிந்தனை மிக்க செயல்பாடு மற்றும் பேச்சு நன்மைகளை தரும். உடன் பிறந்தவர்கள் மற்றும் பணியிடத்தில் உடன் இருப்பவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர்கள் தொடர்பாக புதிய கண்ணோட்டம் உண்டாகும். சொத்து தொடர்பான சில ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் வாய்ப்புகள் பெறலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் நிதானத்தை கடைபிடிப்பதோடு, முழு கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முயற்சிக்கவும். உங்களுடைய குண நலன்களில் மாற்றம் காணப்படும். தொழில், வியாபாரம் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சில மாறுபட்ட சூழ்நிலைகள் இருக்கும். அவற்றை சமாளிக்க பொறுமை தேவைப்படும். கல்வி, விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனமாக இருக்கவும். அவசரப் போக்கு வேண்டாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் மூலம் நல்ல மாற்றங்களும், அனுபவங்களும் உங்களுக்கு கிடைக்கும். இன்று அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் இன்று நெருக்கடி ஏற்படுத்தலாம். பணியிடத்திலும், குடும்பத்திலும் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். இன்று புதுமையான செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளில் சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்க்கும் முன்னேற்றமும் கிடைக்கும். மேலும் நண்பர்கள் என ஆலோசனை ஊக்கத்தை தரும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் மேம்படக்கூடிய நாள். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய சேமிப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுயதொழில் சார்ந்த பயணங்கள் நல பலனை தரும். இன்று வீட்டில் சுப காரியங்கள் தொடர்பான சில விஷயங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மேலும் உங்களுடைய சேமிப்பை அதிகரிப்பதற்கான சில திட்டங்களில் ஈடுபடுபீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளில் இன்று தொய்வு ஏற்படலாம். இன்று பணி சூழலில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும். உங்கள் பழக்க வழக்கத்தில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பு தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வேலை அல்லது வியாபாரம் தொடர்பாக புதியத்துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனை அதிகரிக்க கூடிய நாள். இன்று உங்களுடைய வேலைகளை புதிய முயற்சிகள், திட்டங்கள் மூலம் எளிமையாக நிறைவேற்ற முடியும். இன்று வேலை தொடர்பாக சிறிய பயணங்கள் மேற்கொள்ள நேரிடும் இது மனதில் தெளிவு ஏற்படுத்தும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுடைய தேடல் அதிகரிக்க கூடிய நாள்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணம், பொருள் கொடுக்கல் வாங்கலில் ஞானமாக சிந்தித்து செயல்படவும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் எதிர்பாராத பயணங்கள் உடல் சோர்வை உண்டாக்கும். நினைத்த காரியங்களில் எதிர்பாராத முடிவுகள் உங்களுக்கு கால தாமதத்தை ஏற்படுத்தலாம். உடன் பிறந்தவர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். இன்று எந்த ஒரு சூழலையும் அனுசரித்து செல்ல வேண்டிய நாள். வியாபாரம் தொடர்பாக விவேகத்துடன் செயல்படுவதும், சக ஊழியர்களை அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் வித்தியாசமான கற்பனை, திட்டங்கள் உங்களுடைய நிலையை மேம்படுத்தும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். மனதிற்கு நெருக்கடி தந்த சில பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில் தொடர்பாக வேலை ஆட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மாணவர்கள் படைப்பில் சிறந்த விதத்தில் செயல்படுவார்கள்.