வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தையும் குழந்தையும் பலி! தாய் படுகாயம்

வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தையும் குழந்தையும் பலி! தாய் படுகாயம்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தந்தையும், ஒரு வயது நிரம்பாத குழந்தையும் பலியாகியுள்ளதுடன், தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புளியங்குளம் - புதூர் பகுதியில் இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து அனந்தர் புளியங்குளம், சமளங்குளம் வயலில் நெல் விதைப்பதற்காக தந்தை, தாய், ஒரு வயது நிரம்பாத குழந்தை உள்ளிட்டவர்கள் அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.

 

புளியங்குளம் வைத்தியசாலை

இதன்போது புளியங்குளம், புதூர், 207வது மைல் கல் அருகில் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முயற்சித்த போது எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.

வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தையும் குழந்தையும் பலி! தாய் படுகாயம் | Accident In Vavuniya Father And Child Died

விபத்தில் காயமுற்றவர்களை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றில் ஏற்றி புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் தந்தையும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் தந்தை மற்றும் குழந்தையின் உடலம் புளியங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த தாய் நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

காவல்துறையினர் விசாரணை

இதேவேளை விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பாடசாலை மாணவர்களில் இருவர் விபத்தை பார்வையிட்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்து புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தையும் குழந்தையும் பலி! தாய் படுகாயம் | Accident In Vavuniya Father And Child Died

 

விபத்து குறித்து புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தை இம்மாதம் 23ஆம் திகதி தனது முதலாவது அகவையைப் பூர்த்தி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.