யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் எலி எச்சத்துடன் சவ்வரிசி மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உரிமையாளருக்கு 36 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

பல்பொருள் அங்காடி

இதன்போது பிரபல பல்பொருள் அங்காடியில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் எலி எச்சங்களுடன் கூடிய சவ்வரிசி மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டன.

யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Supermarket Fined Rs 36K In Jaffna For Bad Food

இதையடுத்து, இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் இச்சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இதன்பின், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்றில் முன்னிலையான வர்த்தகர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து வர்த்தகரை கடுமையாக எச்சரித்த மன்று 36 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தமை குறிப்பிடத்தக்கது.