வரலக்ஷ்மி விரதம் 2026: லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறக்கூடிய 6 ராசிகள்

வரலக்ஷ்மி விரதம் 2026: லக்ஷ்மி தேவியின் அருளைப் பெறக்கூடிய 6 ராசிகள்

வரலட்சுமி விரதம் பெண்கள் முன்னெடுத்து செய்யக்கூடிய பூஜை, புனஸ்காரங்கள், வழிமுறைகள் கொண்ட இந்த விரத தினமாக இருந்தாலும், இந்த நாட்களில் ஆண்களும் ( கணவன்) அவர்களுடன் இணைந்து அன்னை மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்து நல்லருளை பெறக்கூடிய சிறப்பு வாய்ந்த தினம் . இந்த அற்புத நாளில் அன்னை வரலட்சுமி தேவியின் அருளால் சில ராசி அன்பர்களுக்கு அவர் விதமான பலன்களை பெற உள்ளனர்.

வரலக்ஷ்மி விரதம்
இந்து சமய நம்பிக்கை படி, ஆடி மாதம் அமாவாசைக்கு பின்னர் ஸ்ரவண ஆதம் என கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தின் பௌர்ணமிக்கு முன்னர் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைபிடிப்பது வழக்கம். அந்த விதத்தில் நாளை ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த அற்புத நாட்டில் செல்வ வளங்களை அள்ளித் தரக்கூடிய மகாலட்சுமி தேவியை வழிபடுவதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் செழிப்பும் நிறைந்திருக்கும். இந்த அற்புதம் நாளில் லட்சுமி தேவியின் அருளால் ஐந்து ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு நல்ல மாற்றங்கள் நிகழப் போகிறது. வரலட்சுமி தேவியின் அருளைப் பெறுவார்கள் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

ரிஷப ராசி

ரிஷப ராசி

உங்களுடைய ராசி அதிபதியான சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். அது மட்டுமில்லாமல் உங்களுக்கு குருவின் ஆசிர்வாதம் இன்று நிறைந்ததாக இருக்கும். இந்த வரலட்சுமி விரத அற்புத நாளில் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். உங்களுடைய வேலை, தொழில் தொடர்பான விஷயங்களில் புதிய வழியில் உங்களுடைய வருமானத்தை உயர்த்த கூடிய வாய்ப்புகள் உருவாக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை பெறுவார்கள். உங்களுடைய முதலீடுகளில் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.

மிதுன ராசி

மிதுன ராசி

மிதுன ராசியை சேர்ந்த அன்பர்களுக்கு இந்த அற்புத நாளில் செல்வ செழிப்புகள் நிறைந்ததாக இருக்கும். குறிப்பாக உச்சம் பெற்ற குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், உங்கள் ராசி அதிபதியின் ஆளும் கன்னி ராசியை சுக்கிரன் சஞ்சரிப்பதன் மூலம், உங்களுடைய செல்வ செழிப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடியதாக இருக்கும். மேலும் உங்களுடைய முயற்சிகள் மூலம் முன்னேற்றம் அடையக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்களை பெறுவீர்கள். வியாபாரம் செய்யக் கூடியவர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

கன்னி ராசி

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வரலட்சுமி விரத நாளில், தேவியின் அருள் ஆசி பெறக்கூடிய முதல் ராசியாக இருக்கும். உங்களுடைய ராசியை சுக்கிரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நிலையில், லாப ஸ்தானத்தில் குரு உச்சம் பெற்றுச்சரிப்பதும் உங்களுடைய வருமான நிலையை உயர்த்தக் கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் இருக்கக்கூடிய அன்பர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் பெற வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தை பெறுவார்கள். மேலும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களுக்கு உங்களுடைய லாப ஸ்தானத்தில் சுக்கிரனின் சஞ்சாரமும், குறிப்பாக உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குருவின் குருவின் சஞ்சாரம் மற்றும் அவருடைய பார்வை பலன் கிடைக்கிறது. உங்கள் ராசி மீது குருவின் அருள் விழுவதால் வரலட்சுமி தேவியின் நல்ல அருள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுடைய மகிழ்ச்சி அதிகரிக்க கூடியதாகவும், நிதிநிலை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடாமல் வாய்ப்புகள் உண்டு. உங்கள் குடும்ப வாழ்க்கையை சூழ்நிலை இனிமையானதாக மாறும். குறிப்பாக மாணவர்கள் படிப்பை சிறப்பாக செயல்படுவதோடு, போட்டிகளில் வெற்றி பெறவும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் இரட்டிப்பு லாபத்தை பெறலாம்.

மகர ராசி

மகர ராசி

மகர ராசி அன்பர்களுக்கு இந்த வர மகாலட்சுமி விரத அற்புத நாளில் குரு மற்றும் சுக்கிரனின் நல்ல அருள் கிடைக்கக் கூடியதாக இருக்கும். உங்களுடைய சப்தம ஸ்தானத்தில் குரு அமர்ந்து அவருடைய நேரடி பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் வரலட்சுமி தேவியின் நல்ல அருள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிக்க முடியும். உங்களுக்கு வரவேண்டிய பணம் எதிர்பார்த்த விதத்தில் கிடைக்கும். இந்த அற்புத நாளில் பக்தி உடன் லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம் நற்பலனை அதிகம் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண உறவு அமையும்.

மீன ராசி

மீன ராசி

மீன ராசி அன்பர்களுக்கு வரலக்ஷ்மியின் ஆசிர்வாதம் நிறைய கூடியதாக இருக்கும். உங்களுடைய ராசிக்கு ஐந்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிப்பதும், சப்தமஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதன் மூலம் உங்களுடைய பொருளாதார நிலையை வலுவடைய வாய்ப்புகள் உண்டு. இந்த புது நாளில் லட்சுமி தேவிக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்ட அவரின் மூலமாக செல்வ வளம் சேரும். மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு போன்ற நல்ல செய்திகளும் கிடைக்கும்.