கோர தாண்டவம் ஆடிய "டித்வா" ; சோகத்தை ஏற்படுத்தும் யாழ்ப்பாணத்தின் நிலை

கோர தாண்டவம் ஆடிய "டித்வா" ; சோகத்தை ஏற்படுத்தும் யாழ்ப்பாணத்தின் நிலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

கோர தாண்டவம் ஆடிய "டித்வா" ; சோகத்தை ஏற்படுத்தும் யாழ்ப்பாணத்தின் நிலை | Flood Situation In Jaffna That Causes Sadnes

இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 966 குடும்பங்களைச் சேர்ந்த 3052 அங்கத்தவர்கள் 36 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.

4904 குடும்பங்களை சேர்ந்த 15ஆயிரத்து 872 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 3 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என தெரிவித்தார்.