வட்டுவாகல் பாலத்தில் இரவிரவாக நடந்த பணிகள் ; அனுர அரசின் உடனடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

வட்டுவாகல் பாலத்தில் இரவிரவாக நடந்த பணிகள் ; அனுர அரசின் உடனடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது.

வட்டுவாகல் பாலத்தில் இரவிரவாக நடந்த பணிகள் ; அனுர அரசின் உடனடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி | Vehicles Allowed To Ply On Vattuwagal Bridge

அண்மைய நாட்களாக பெய்த பலத்த மழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது.

இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில்  தொடர்ச்சியாக இரவு பகலாக வேலைகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து நேற்று (03) இரவு 9.45 மணியளவில் இருந்து வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்தினை மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டு வாகனங்கள் பயணிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ழ்சியடைந்துள்ளனர்.

GalleryGalleryGallery