இருளில் மூழ்குமா நயினாதீவு? மக்களிடம் கோரிக்கை

இருளில் மூழ்குமா நயினாதீவு? மக்களிடம் கோரிக்கை

  யாழ்ப்பாணம் நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒரு மின் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மின் துண்டிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்படுள்ளது.

இந்நிலையில் மின் இயந்திரம் ஒன்று பழுதடைந்துள்ளதால் தற்போது சிறிய மின் இயந்திரம் மூலமே மின்சாரம் வழங்கப்படுவதனால், பொது மக்கள் தங்கள் மின் பாவனையை சிக்கனமாக பாவிக்குமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இருளில் மூழ்குமா நயினாதீவு? மக்களிடம் கோரிக்கை | Nainathivu At Risk Of Power Outage

குறிப்பாக இரவு 12:00 மணியிலிருந்து அதிகாலை 05:00மணி வரையும் தேவையற்ற மின்பாவனைகளை குறைத்து ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மக்கள் மிசாரத்தை சிக்கனம் செய்யு,ம் பட்சத்தில் மின்சாரம் தொடர்ந்து வழங்க முடியும் என மின்சார சபையினர் தெரிவித்துள்னர்.