பேரிடருக்கு மத்தியில் இலங்கையில் நடந்த கொடூரம் - ஆணும் பெண்ணும் வெட்டிக்கொலை

பேரிடருக்கு மத்தியில் இலங்கையில் நடந்த கொடூரம் - ஆணும் பெண்ணும் வெட்டிக்கொலை

நுரைச்சோலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை மற்றும் மற்றொரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவக்கடுவ பகுதியில் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பலத்த காயங்களுக்குள்ளான ஆணும் பெண்ணும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஆண் 38 வயது எனவும் உயிரிழந்த பெண் 35 வயது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரிடருக்கு மத்தியில் இலங்கையில் நடந்த கொடூரம் - ஆணும் பெண்ணும் வெட்டிக்கொலை | 2 Person Killed And One Injured

தனிப்படை தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.