யாழில் மாமனாரினால் கொடூரமாக வாள்வெட்டுக்கு இலக்கான மருமகன்
யாழில் (Jaffna) வாள் வெட்டு தாக்குதலுக்கு நபரொருவர் இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாமன் மற்றும் மருமகனுக்கிடையில் இடம்பெற்ற வாயத்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாமன் மருமகன் மீது வாளால் வெட்டியதில் மருமகன் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயத்திற்கு உள்ளானவர் வடமராட்சி துன்னாலையை வேம்படி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் நிதீஸ்குமார் ஆவார்.
இதேவேளை வெட்டியவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.