வெள்ளத்தில் மூழ்கியது யாழ் பலாலி பொலிஸ் நிலையம்
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் பாதுகாப்பு படைகளின் முகாம் மற்றும் அலுவலகங்களும் பாதிப்படைந்துள்ளன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்குள் வெள்ள நீர்புகுந்துள்ளதால் பொலிஸார் பல்வேறு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வெள்ள நீரைஅகற்ற முடியாத நிலை காணப்படுவதுடன் தொடர்ச்சியாக மழையும் பெய்து வருவதால் பொலிஸாரின் சேவைகளும் சிரமத்திற்குள்ளாகி உள்ளது யாழ் பலாலி பகுதியில் அதிகளவான இடத்தில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.