யாழில் மீளாத்துயரை ஏற்படுத்திய சிசுவின் மரணம் ; பாலூட்டிய தாய்க்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி

யாழில் மீளாத்துயரை ஏற்படுத்திய சிசுவின் மரணம் ; பாலூட்டிய தாய்க்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் - கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

யாழில் மீளாத்துயரை ஏற்படுத்திய சிசுவின் மரணம் ; பாலூட்டிய தாய்க்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி | Tragic Death Of Baby In Jaffna Causes Grief Again

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிறந்துள்ளது.

இன்றையதினம் குழந்தையின் தாயார் குழந்தைக்கு பாலூட்டிய சிறிது நேரத்தில் அந்த குழந்தை திடீர் சுகவீனமுற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த குழந்தையை பெற்றோர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.